கருணாநிதிக்கு நாளை அம்பேத்கர் விருது - விடுதலை சிறுத்தைகள் வழங்குகிறார்கள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நாளை 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருது வழங்கப்படுகிறது.
நாளை அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
சென்னையில் காலை 9 மணி அளவில் கோயம்பேடு சந்தை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அத்துடன், கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறுகிறது.
இவ்விழாவில், தமிழக முதல்வர் கலைஞருக்கு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை பாராட்டும் வகையில், 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருதும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. விழாவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றுகிறார்.
திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணிக்கு 'பெரியார் ஒளி' விருதும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு 'காமராசர் கதிர்' விருதும், கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருதும், ஞான அலாய்சியஸ்க்கு 'அயோத்திதாசர் ஆதவன்' விருதும் மறைந்த தமிழ் பேரறிஞர் தேவநேய பாவாணருக்கு 'செம்மொழி ஞாயிறு' விருதும் வழங்கப்படுகின்றன.
விருதுகளுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் கலைநிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது' எனக் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications