ஐன.3ல் அடையாறு பூங்காவைத் திறக்கிறார் பிரதமர்-ஸ்டாலின் தகவல்
சென்னை: 2011, ஜனவரி மாதம் 3-ம் தேதி சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவின் இறுதி கட்ட பணிகளை நேற்று மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியனும் வந்திருந்தார்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தில் 358 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அடையாறு பூங்கா என்னும் சுற்றுச்சூழல் பூங்காவின் தொடக்க பணிகளை கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தை மறுசீரமைப்பதற்காக அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கியது. பிச்சான்டிகுளம் காடு வளர்ப்பு ஆலோசகர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நில மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வருகை மற்றும் நெறிப்படுத்துதல் பகுதியில் அழகான பாறைகள் அடுக்குதல், கருங்கல்லில் செய்யப்பட்ட இருக்கைகள் அமைத்தல் மற்றும் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீர் வழிகளை கடக்க 3 மரப்பாலங்களும், 1 இரும்புப் பாலமும் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. பார்வையாளர்கள் பயன்படுத்தும் பகுதியில் கருங்கல் இருக்கைகள் பொருத்தும் பணியும், பசுமை வேலி அமைக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். மற்ற பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
மேலும் இந்த இடம் நகரின் புனரமைப்பு பணிகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பு போன்ற தகவல்களை, பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்துகொள்ளும் இடமாகவும் அமையும். எதிர்காலத்தில் நமது பூமியை பாதுகாக்கும் இளம் சந்ததியினரை உருவாக்க இந்த அடையாறு பூங்கா பெரும் அளவில் பயன்படும்.
இந்த பூங்காவி்றாகக இதுவரை ரூ. 18 கோடியே 74 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பூங்காப் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. மீதி இருக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த பூங்காவை பிரதமர் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவிற்கு முதல்வர் தலைமை தாங்குகிறார்.
எஞ்சிய 300 ஏக்கருக்கான பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் அதற்கான பணிகளும் தொடங்கிவைப்பார்கள். அடையாறு சிற்றோடை புதுப்பித்தல் மற்றும் அடையாறு முகத்துவாரம் புனரமைப்பு பணிகள் குறித்த வரைவு பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் ஒரு பசுமை மையம் அமைக்கப்படுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications