குழந்தைகள் கொடுமையில் மிசோரம் 2-வது இடம்: முதலிடத்தில் அசாம்

Subscribe to Oneindia Tamil

Child Abuse
ஐஸ்வால்: நாட்டிலேயே குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் மிசோரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அன்டை மாநிலமான அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி மிஸோரம் மாநிலத்தில் சேலத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் தக்திங் பகுதியில் 5 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொடூரச் செயலால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைத்தனர். அவர்கள் ஆத்திரம் குறையும் முன் ஐஸ்வால் அருகே உள்ள முவாலங்க்து கிராமத்தில் இன்னொரு 5 வயது சிறுமி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டாள். இந்த குற்றம் நடந்த மறுநாள் 26 வயதான மியன்மாரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான கொடுமையில் அஸ்ஸாமிற்கு அடுத்து மிசோரம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று அம்மாநில குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+