ரியாத்தில் பாரதிதாசன் விழா

Subscribe to Oneindia Tamil

பாரதிதாசன் விழா ரியாத் வளைகுடா செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பாகக் 29.04.2010 அன்று அவரது பிறந்த தினத்தன்று கொண்டாடப்பட்டது.

பாரதிதாசனின் வாழ்க்கைக் குறிப்புகள் தொகுத்து வழங்கப்பட்டு, அவர் குறித்த வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நினைவலைகளின் தொகுப்பு, மகளிரணி பங்கு கொண்ட கருத்தரங்கம் மற்றும் ரியாத் கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றன.பாரதிதாசன் பாடல்கள் பாடி, நடனமாடி அவர் கருத்துகளை வலியுறுத்தினர்.

நாக. இளங்கோவன் அவர்கள் தலைமையில், "அன்றாடம் பயன்படுத்தப்படும் 40 ஆங்கில வார்த்தைகளைத்தவிர்த்துத் தமிழ் வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும்" என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புலவர். அரங்கராசர், தம் சிறப்புச் சொற்பொழிவில் பாரதிதாசனைச் சந்தித்ததை நினைவு கூர்ந்து, அவர் பாடலில் வலியுறுத்திய கருத்துகளை மேற்கோள் காட்டி, பாடல்களையும் பாடிக்காட்டி, தமிழருடன் தமிழில் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தென்காசி ஆய்க்குடி 'அமர் சேவா சங்கம்' என்ற அமைப்புக்கான உதவிப் பணிகளும் விவரிக்கப்பட்டன. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+