தீபாவளி-திருப்பதி கோவில் உண்டியல் வசூல் ரூ.1.37 கோடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: தீபாவளியையொட்டி திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பக்தர் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சாமியை தரிசிக்க சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவில் உண்டியலில் ரூ. 1. 37 கோடி வசூலாகியுள்ளது.
மொட்டை போடும் இடம், அன்னதான காம்ப்ளக்ஸ் கட்டிடம் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்றும் பக்தர் கூட்டம் அதிகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications