அமெரிக்காவில் தொடரும் அவலம்-7 மாதங்களில் 90 வங்கிகள் திவால்
நியூயார்க்: அமெரிக்க வங்கித் துறை இன்னும் நிமிர்ந்தபாடில்லை. கடந்த 7 மாதங்களில் மட்டும் 90 வங்கிகள் அங்கு திவாலாகி மூடப்பட்டுள்ளன.
மாதத்திற்கு சராசரியாக 13 வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார மீட்சி மிகவும் மெதுவாக இருப்பதால், பல வங்கிகள் ஸ்திர நிலைமைக்கு வர முடியாமல் தடுமாறுகின்றன. தொடர்ந்து அங்கு வங்கிகள் மூடப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்ட அளவு அதிகரித்து வருவதும் வங்கிகள் சீர்குலைவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 90 வங்கிகளை மூடியுள்ளனர். ஜூலை 9ம் தேதியன்று ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, யுஎஸ்ஏ வங்கி, ஐடியல் பெடரல் சேவிங்ஸ் வங்கி ஆகியவை காலியாகின.
உலகின் நம்பர் ஒன் பொருளாதார சக்தியான அமெரிக்காவில் ஜூன் மாதத்திய வேலையில்லாத் திண்ட்டாட்ட அளவு 9.5 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
