வேலூர் மாவட்டம் ஏலகிரியில் பாராகிளைடிங் திருவிழா
ஏலகிரி (வேலூர்): வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில், பாராகிளைடிங் திருவிழா தொடங்கியுள்ளது.
இந்த விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்களும், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
பெண்கள் பலர் 20 நிமிடங்களுக்கும் மேல் வானில் பறந்து ஆச்சரியப்படுத்தினர்.
இந்த விழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏலகிரியில் குவிந்தனர். இதனால் ஏலகிரி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இருப்பினும் போதிய போக்குவரத்து வசதியோ, சாலை வசதியோ இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த விழா குறித்து வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கூறுகையில்,
ஏலகிரி மலையில் பாராகிளைடிங்கில் பறப்பதற்கான காலநிலை, போதுமான காற்று சிறப்பாக உள்ளது. இங்கு உலக தரம் வாய்ந்த பாராகிளைடிங் திருவிழா நடத்தலாம்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல பாரா கிளைடிங் பயிற்சி செய்வதற்கு ஏலகிரி உகந்த இடம் என்றனர்.












Click it and Unblock the Notifications