31 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி
சென்னை: இந்திய டென்னிஸின் தொட்டில் என்று அழைக்கப்படும் சென்னை மாநகரில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியா, பிரேசில் இடையிலான உலகப் பிரிவு டேவிஸ் கோப்பைப் போட்டிகள் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடைசியாக இந்தியாவில் 1979ம் ஆண்டுதான் டேவிஸ் கோப்பைப் போட்டி நடந்தது. அப்போது நடந்த தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு தற்போதுதான் டேவிஸ் கோப்பைப் போட்டிகள் சென்னைக்கு வருகின்றன.
கடந்த ஆண்டே ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான டேவிஸ் கோப்பைப் போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வர மறுத்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது.
இந்தியா, பிரேசில் இடையிலான போட்டிக்கான டிரா, செப்டம்பர் 16ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்கு முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெறும். தொடர்ந்து 2வது ஒற்றையர் போட்டி நடைபெறும்.
செப்டம்பர் 18ம் தேதி மாலை 3 மணிக்கு இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறும். பின்னர் 19ம் தேதி மாற்று ஒற்றையர் போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால், உலகப் பிரிவில் 16 அணிகளில் ஒன்றாக இந்தியா முன்னேற வாய்ப்புள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications