விஸ்வகர்மா சமூதாயத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க கோரிக்கை
கரூர்: விஸ்வகர்மா சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் வேண்டும் என்று அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதாரத்திலும், கல்வி , வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
இதில், கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், தமிழகம் முழுக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் எந்த ஜாதியினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் பின் தங்கிய சமூகத்திற்கு நன்மைகள் செய்ய முடியும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினசரி துன்பத்திற்கு ஆளாகின்றனர். மீனவர்கள் கடலுக்குச் சென்றால் கரை திரும்புவது நிச்சயமற்ற செயலாக உள்ளது. இது மனித உரிமைக்கு எதிரான செயல்.
எனவே, மீனவர்களின் பாதுகாப்புக்கு என மத்திய மாநில அரசுகள் இணைந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்கலாம். அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இது தான் அவர்களுக்கு முழுமையான தீர்வை தர முடியும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications