24-ம் தேதி தொடங்குகிறது குற்றாலம் சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா வரும் 24-ம் தேதி ஆரம்பமாகிறது. இந்த விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் திருவிழா வரும் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
வரும் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சாரல் திருவிழா ஆரம்பமாகிறது. கலெக்டர் ஜெயராமன் வரவேற்புரை அளிக்கிறார்.
சுற்றுலா மற்றும் பதிவு துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் சாரல் திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். அமைச்சர் பெரிய கருப்பன் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
எம்.பி. லிங்கம், எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எம்.பி.க்கள் தங்கவேலு, ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அன்று மாலை 4 மணிக்கு அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், 5 மணிக்கு சென்னை வடிவுடையம்மன் நாட்டியாலயா சுஜாதா குழுவினரின் பல்சுவை நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு ராஜ்குமாரி்ன் அசத்தப் போவது யாரு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications