ரயில்கள் எண்கள் மாற்றம்-நெல்லையில் புதிய பெயர் பலகை பணி மும்முரம்
நெல்லை: ரயில்களின் எண்கள் 4ல் இருந்து 5 இலக்கமாக மாற்றப்பட்டதை அடுத்து நெல்லையில் புதிதாக பெயர் பலகை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நான்கு இலக்க ரயில் எண்களை 5 இலக்கமாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்களுக்கு முன் 1ம், பயணிகள் ரயில்களின் என்களு்ககு முன் 5ம் சேர்க்கப்பட்டுள்ளன.
இது கடந்த 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்பவர்கள் 5 இலக்க புதிய எண்களை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளில் புதிய எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதால் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லையை பொருத்தவரைக்கும் ஜம்முதாவி மற்றும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்களின் பெயர் பலகை புதுக்கப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு ரயில் பெட்டியில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெயர் பலகை ரயில் எண்களுடன் பொருத்தப்பட்டு இருக்கும். அவற்றை அகற்றிவிட்டு பழைய எண்கள் மற்றும் பெயர்கள் அழிக்கப்பட்டு புதிய எண்கள் எழுதப்பட்டு வருகிறது. இந்த பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications