மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நைடபெற்றது.
ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற்ற இந்த முகாம், சென்னை நுங்கம்பாக்கம், ரமா தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் குறைபாடுகளைப் பரிசோதித்து உரிய ஆலோசனைகளை வழங்கினர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், மாணவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
காது கேளாத குறைபாடு கொண்டிருந்த மாணவர்களுக்கு காது கேட்கும் கருவிகளும் அளிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 262 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இவர்களில் 116 பேருக்கு கண்களில் பாதிப்பு இருந்ததும், 65 பேருக்கு காது கேட்காத தன்மை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 46 பேர் மன வளம் குறைந்தவர்கள். 35 பேர் உடல் ஊனம் கொண்டவர்கள் ஆவர்.
அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு அதுகுறித்த ஆலோசனைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆர்.அஸ்வினி, ரங்கப் பிரியா, வாணி நந்தகுமார், ரூபெல்லா, முருக ரேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications