வா.சே. குழந்தைசாமிக்கு சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது

தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி மூத்த தமிழறிஞர் விருது மற்றும் சிறந்த இலக்கிய நூலுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞருக்கான விருதுக்கு ரூ. 1.50 லட்சம் பரிசும், இலக்கிய நூலுக்கு ரூ. 1 லட்சமும் பரிசாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இலக்கிய பரிசளிப்பு விழாவும்,சி.பா.ஆதித்தனாரின் 106-வது பிறந்த நாள் விழாவும், நேற்று மாலை 6 மணிக்கு, சென்னை, ராணி சீதை மன்றத்தில் நடந்தது. விழாவுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் தலைமை தாங்கினார். தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் தலைமை உரையாற்றினார். பின்னர், இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது டாக்டர் வா.செ.குழந்தைசாமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை அணிவித்து, ரூ. ஒன்றரை லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் வழங்கினார்.
சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை, கவிஞர் மு.மேத்தா பெற்றார். மு.மேத்தாவின் கவிதைகள் என்ற கவிதை நூலுக்கு இந்த பரிசு கிடைத்தது.
மு.மேத்தாவுக்கு பொன்னாடை அணிவித்து, ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications