வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய விழா தொடக்கம்

கீழை நாடுகளின் லூர்து என போற்றி புகழப்படுவது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்தியாவில் உள்ள சில பசிலிக்கா எனப்படும் பேராலயங்களில் இதுவும் ஒன்று.
இங்கு ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா பெரும் விழாவைக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி நேற்று மாலை 5.45 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் பொறித்த திருக்கொடி பவனி நடந்தது.
பின்னர் தஞ்சை ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை புனிதம் செய்தார். அதனை தொடர்ந்து மாலை 6.50 மணிக்கு பேராலயத்தையொட்டி வடக்குபுறம் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது.
பேராலயத்தை சுற்றி 4 இடங்களில் ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய அகன்ற திரையில் கொடியேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனால் வேளாங்கண்ணியின் பல்வேறு பகுதியில் திரண்டிருந்த மக்கள் கொடியேற்ற நிகழ்ச்சியை பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர்.
கொடியேற்றப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பின் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகியவை நடந்தது.
கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கியபோது பலத்த மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் சற்றும் நகராமல் இருந்து கொடியேற்றத்தைக் கண்டு மாதாவின் அருள் பெற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications