அபுதாபியில் ஸையித் சர்வதேச மாரத்தான் 2010
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் வரும் 7ஆம் தேதி ஸையித் சர்வதேச மாரத்தான் 2010 போட்டிகள் நடைபெற உள்ளன.
அமீரக துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஸையித் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவுடன் அபுதாபி கோர்னிச் பகுதியில் இப்போட்டி நடைபெற இருக்கிறது.
பத்து முதல் பதினைந்து வயதுடையவர்கள் மூன்று கிலோமீட்டர் தூர ஓட்டத்திலும், பொதுமக்கள் மற்றும் ஊனமுற்றோர் 6 கிலோ மீட்டர் தூர ஓட்டத்திலும், ஓட்டப் பந்தய வீரர்கள் 21 கிலோ மீட்ட ஓட்டத்திலும் பங்கேற்கலாம்.
போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த தகவல்களுக்கு 02 4415900 எக்ஸ்டென்ஷன் 2308 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது www.zayedmarathon.com என்ற இணைய முகவரியிலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications