மே 16 - அட்சய திரிதி - தபால் அலுவலகங்களில் தங்க காசு விற்பனை
மதுரை: மே 16 ம் தேதி அட்சய திரிதியை முன்னிட்டு தபால் அலுவலகங்கள் இயங்கும். அன்று தங்கக் காசுகள் விற்பனை செய்யப்படும் என்று தென் மண்டல தலைவர் பி.செல்வக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் 101 தபால் அலுவலகங்கள், தென் மண்டலத்தில் 18 தபால் அலுவலகங்களில் இந்திய தபால் துறை உலக தங்க அமைப்புடன் இணைந்து சுத்த தங்க நாணயங்களை விற்பனை செய்ய உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தலைமை அலுவலகம், தல்லாகுளம், அரசரடி தலைமை அலுவலகங்கள், திருமங்கலம் துணை அலுவலகம், சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக் கோட்டை, நெல்லை, பாளை, அம்பாசமுத்திரம், தென்காசி, நாகர்கோவில், தக்கலை, நிலக் கோட்டை, தேவகோட்டை தலைமை அலுவலகங்கள், தேனி, மார்த்தாண்டம் துணை அலுவலகங்களில் இச் சேவை நடைமுறையில் உள்ளது.
மே 16 ம் தேதி அட்சய திரிதியை முன்னிட்டு தபால் அலுவலகங்கள் இயங்கும்.
கடந்த அட்சய திரிதியின் போது 3,429 கிராம், தீபாவளியின் போது 19,762 கிராம் தங்கம் விற்பனையானது.
இந்த அட்சய திரிதியை முன்னிட்டு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ஆறு சதவீத தள்ளுபடி திட்டத்தை, மே 31 ம் தேதி வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தபால் முத்திரை இடம் பெற்றிருக்கும்.
மேலும் 2009 மே முதல் தேதியில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 9 மாவட்டங்களில் 29 தலைமை தபால் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
18 முதல் 55 வயதுடைய அரசு, தனியார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதில் சேரலாம். மாதம் 500 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 6000 ரூபாய் செலுத்த வேண்டும்.
60 வது வயதில் அவர்களுக்கு 60 சதவீத தொகை திரும்ப வழங்கப்படும். மீதமுள்ள 40 சதவீதத்தில் இருந்து மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் பெற தபால் துறை தலைவர் அலுவலகத்திலுள்ள வர்த்தக மேம்பாட்டு மையத்தை (0452) 252 6398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications