தமிழ் செம்மொழி மாநாடு- கல்லூரி மாணவர்களுக்கான போட்டி - அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு
கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ் விக்கிபீடியா இணையதளத்துக்கு கட்டுரை அளிக்கும் போட்டியில், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், கலை அறிவியல், சட்டம் என 7 துறைகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வழங்கும் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும் என அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறுகையில்,
'பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கணினித் தமிழ் வரைகலை போட்டிகளில் சிறந்த மாணவர்கள், சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வரும்.
அடுத்து கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தமிழ் இணையதளத்துக்கு கட்டுரை அளிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ் மொழியைவிட குறைந்த அளவிலே பேசப்படும் ஸ்பானிஷ் மொழியில் விக்கிபீடியா இணையதளத்தில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. அதே போன்று, சீன மொழியில் 2 லட்சம் கட்டுரைகள் உள்ளது.
ஆனால், தமிழ் மொழியில் சுமார் 19 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், கலை அறிவியல், சட்டம் என 7 துறை சார்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள்துறை சார்ந்த கட்டுரைகளை அளிக்கலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 15ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30 ம் தேதி வரை கட்டுரைகளை அளிக்கலாம்.
சிறந்த கட்டுரைகளை அளிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications