குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு-சிக்கிய ஒருவர் பலி

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.
தண்ணீரும், சாரலும் நிறைந்திருக்கும் காலமான இச்சமயத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடையாத காரணத்தால் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதிகளில் தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும் அருவிகளுக்கு நிறைந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியும் நேற்று முன்தினம் வரை குறைவான அளவே தண்ணீர் விழுந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் பெய்ததால் அருவிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அருவி தடாகத்தில் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த ஒருவர் தவறி விழுந்து இறந்து போனார். அவரது உடலை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது குற்றாலத்தில் நல்ல சாரல் மழை வீசி வருகிறது. இதமான சூழல் நிலவுவதால் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி என ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
ஆனால் வெள்ளப் பெருக்கு காரணமா குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்று ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications