கனடா வேலைவாய்ப்பு தகவல் மையம் இந்தியாவில் அமைகிறது!

Subscribe to Oneindia Tamil

Canada Flag
டோராண்டோ: கனடாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் அலுவலம் திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கனடா குடியுரிமைத் துறை அமைச்சர் ஜெசன் கென்னி தெரிவித்திருப்பதாவது:

தொழில் திறமை மக்கவர்கள் எங்கள் நாட்டில் வந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு வசதியாக திறமைசாலிகள் அதிகமுள்ள இந்தியாவில் அலுவலகம் திறக்கவுள்ளோம்.

இந்த அலுவலகம் கனடாவில் எந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை அளிக்கும்.

எங்கள் நாட்டுக்கு பணியாற்ற வர விரும்புபவர்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகாமல் வேலை தேட இந்த நடவடிக்கை உதவும்.

இந்தியா தவிர சீனா, பிலிப்பின்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற அலுவலகங்களைத் திறக்க இருக்கிறோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும். இதற்காக சுமார் ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் துறை மூலம் வேலை வாய்ப்பு தகவல் அளிக்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+