‘சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு'-கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம் குறித்து கீற்று இணையத்தளம் சார்பில் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இந்த கருத்தரங்கம் நடக்கிறது.
இதில், பத்திரிக்கையாளர் பாரதி தம்பி, எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா, வழக்கறிஞர் சுந்தர்ராஜன்,பெண்ணியலாளர் ஓவியா, 'தலித் முரசு" புனித பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா,பெரியார் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி ஆகியோர் பேசவுள்ளனர்.
விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கேள்வி நேரமும் இடம் பெறும்.












Click it and Unblock the Notifications