குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் மின்தடையால் மக்கள் அவதி
தென்காசி: குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அடிக்கடி இரவில் மின்தடை ஏற்படுவதால் அங்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. ஆனால் மின்வாரியம் காட்டும் அலட்சியத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஐந்தருவியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் அருவியில் குளித்த பெண்களும், குழந்தைகளும் இருளில் சிக்கி கூப்பாடு போட்டனர். பல நேரங்களில் இதுபோல் நடக்கிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து இரவு பணியில் இரண்டு மின் ஊழியர்களை மின்வாரியம் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் நியமிக்கவில்லை. குற்றாலத்தை போல் எக்ஸ்பிரஸ் பீடர் லைன் ஐந்தருவிக்கு கொண்டுவரப்படவில்லை.
மேலும் குற்றாலம், ஐந்தருவி பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. காற்று வேகமாக வீசும் வேளையில் வீடுகளுக்கு செல்லும் வயர்கள் ஓன்றுடன் ஓன்று உராய்ந்து மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்காக உள்ள செப்பரேட்டர்களை முறையாக பொருத்தவில்லை.
மின் வாரியத்தினரின் இதுபோன்ற அலட்சியத்தால் ஐந்தருவி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications