குற்றாலத்தில் சிஎஸ்ஐ சினாட் பேரவை தேர்தல்
குற்றாலம்: குற்றாத்தில் நடந்த சிஎஸ்ஐ சினாட் பேரவை கூட்டத்தில் பெங்களூரு பிஷப் புதிய மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் துணை மாடரேட்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஎஸ்ஐ பிரதம பேராயர் (மாடரேட்டர்), துணை பிரதம பேராயர் (துணை மாடரேட்டர்), பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் பதவி காலம் முடிவடைந்தது. இப்பதவிகளுக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய 32வது சினாட் பேரவை கூட்டம் குற்றாலத்தில் துவங்கியது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை யாழ்பாணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 டயோசீசன்களின் பிஷப்புகள், சினாட் உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாடரேட்டர் கிளாட்சன் தலைமை வகித்தார். 600 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாடரேட்டராக தேர்ந்தெடுக்க விரும்பும் பி்ஷப்புகளின் பெயர்களை சினாட் உறுப்பினர்கள் எழுதி கொடுத்தனர்.
50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு பெற்றவர்கள் மாடரேட்டராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இத் தேர்தலில், பெங்களூரு டயோசீசன் பிஷப் வசந்தகுமார் மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் தேவகடாகட்சம் துணை மாடரேட்டராகவும், பொது செயலாளராக மத்திய கேரளாவை சேர்ந்த எம்.எம் பிலிப், பொருளாளராக தெற்கு கேரளா திருவனந்தபுரம் டயோசீசனை சேர்ந்த பெனட் ஆபிரகாம் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்படட நிர்வாகிகளுக்கு இன்று மாலை 4.30 மணிக்கு குற்றாலத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அமைச்சர்கள் மைதீன்கான், எம்பி ராமசுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications