கொளுத்தும் வெயில் - நெல்லையில் மலைபோல் குவியும் தர்பூஸ் பழங்கள்
நெல்லை: நெல்லை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருவதால் அங்கு தர்பூஸ் பழ விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பருவ மழை பொய்த்ததால் கோடை வெயிலின் தாக்கம் கடந்த வருடங்களை விட தற்போது அதிகமாக உள்ளது. இதனால் ஹோட்டல், மற்றும் டீக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து காணப்படுவதுடன் குளிர்பானங்களான இளநீர், சர்பத் ஸ்டால், ஜூஸ் கடைகள் என மக்கள் கூட்டம் அலைமோதிகிறது.
கோடை வெயிலின் தாக்கத்தை போக்குகின்ற வகையிலும், ஏழைகளுக்கு குறைந்த விலையில் தாகத்தை தீர்க்கின்ற வகையிலும் தர்ப்பூசணி பழங்கள் வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் நெல்லையில் தர்ப்பூசணி பழங்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திண்டிவனம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தர்பூசணி பழங்களை கிலோ ரூ.5.50க்கு கொள்முதல் செய்து லாரி வாடகை டன் ஓன்றுக்கு ரூ.1000 வீதம் சுமார் 10,000 வரை வாடகை கொடுத்து கொண்டு வருகின்றனர்.
இவை நெல்லை பகுதிகளில் கிலோ ரூ.10 வரை விற்பனையாகிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் கூறு போடப்பட்டு சில்லரை விற்பனையாகவும் நடந்து வருகிறது. எவ்வித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாத தர்ப்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிட்டு வெயில் கொடுமையிலிருந்து தப்ப முயலுகின்றனர் மக்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications