திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க செம்மொழி மாநாட்டுக் குழு கோரிக்கை
தஞ்சாவூர்: உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தஞ்சையில் நடந்தது.
இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிப்பது.
2010ம் ஆண்டை தமிழ் ஆண்டாக அறிவிக்ககோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். செம்மொழி கோரிக்கையை முதன் முதலில் வைத்த கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் விருது வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தமிழ் அமைப்புகள் தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் ஆங்காங்கே மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடத்தி, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலமாகவும் பிரசாரம் செய்து மாநாட்டிற்கு அனைவரும் தஞ்சை கரந்தை தமிழ்ச்சங்கம் மூலம் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications