டெல்லி காமன்வெல்த் போட்டி-தொடங்கி வைக்க ராணி எலிசபெத் மாட்டார்!

லண்டன்: 44 ஆண்டு கால காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடங்கி வைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதில் இளவரசர் சார்லஸ், போட்டியைத் தொடங்கி வைப்பாராம். அன்றைய தினம் ராணியின் செய்தி படிக்கப்படுமாம்.
கடும் வேலைப் பளு காரணமாக ராணி டெல்லி காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் இளவரசர் சார்லஸ் டெல்லி செல்வார். ராணியின் செய்தியை அவரே வாசிப்பார் என்று தெரிவித்துள்ளது.
பக்கிங்காம் அரண்மனைச் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளை ராணி ஒத்துக் கொண்டிருப்பதால் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்க போக முடியாத நிலையில் ராணி இருக்கிறார் என்றார்.
இங்கிலாந்து நாட்டிடம் முன்பு அடிமைகளாக இருந்த நாடுகள் இணைந்த அமைப்புதான் இந்த காமன்வெல்த். காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் போட்டிகள், உலக அளவில் பிரபலமான சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications