கல்வித் தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும்-அமைச்சர் பொன்முடி
காரைக்குடி: தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்றால் தாய் மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,
உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் தற்போதைய குறிக்கோளாகும். இதற்கான தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் கருவியாக செயல்பட வேண்டும்.
தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. அது மட்டும் போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும். அதற்காக அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு வழங்க தொழில் மயமாதல் அவசியம். தொழில் மயமாதலுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். இம் முரண்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என ஆராய்ச்சி செய்யவேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் தொழில்திறன்களை வளர்க்க நூறு சமுதாய கல்லூரிகள் செப்டம்பரில் துவக்கப்படும்.
கல்வி தரம் மேம்பட வேண்டும் என்றால் தாய் மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் அமைச்சர் பெரியகருப்பன், கர்நாடகா பல்கலை துணைவேந்தர் சீனிவாஸ் கே.சைதாபூர், இந்திய பல்கலை கூட்டமைப்பு பொது செயலாளர் பீனாஷா, மாணிக்கவாசகம், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், கன்னியப்பன், மருதமுத்து, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் அருணா ஆகியோர் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications