மருத்துவ ஆராய்ச்சிக்காக ரூ. 70 கோடி நன்கொடை அளித்த ஜே.கே.ரவுலிங்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரவுலிங். சிறந்த எழுத்தாளர். இவரது ஹாரி பாட்டர் நூல்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த கதைகள் மூலம் மிகப் பெரிய கோடீஸ்வரியாக உருவெடுத்தவர் ரவுலிங்.
இவரது தாயார் பெயர் அன்னா. இவர் ஸ்கிளீராஸிஸ் (sclerosis) தாக்கி உயிரிழந்தார்.
ஸ்கிளீராஸிஸ் வந்தவர்களுக்கு மூளையின் நரம்பு செல்களை தாக்கப்பட்டு செயலிழந்து போகும். முதுகெலும்பும் செயலிழந்து போகும். நரம்பு செல்கள்தான் நமது உடலின் செயல்பாட்டுக்கான கட்டளைகளை ஆக்ஸான்கள் எனப்படும் நீண்ட கற்றைகள் மூலம் அனுப்புகிறது. இந்த ஆக்ஸான்கள் மீது மயலின் மூடியபடி இருக்கும். ஸ்கிளீராஸிஸ் வந்தவர்களுக்கு, இந்த மயலின் பாதிக்கப்படும். மேலும், உடலின் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும். மயலின் உறுதித்தன்மையை இழந்து, செயலிழந்து போனால், ஆக்ஸான்கள் செயலிழந்து கட்டளைகள் போவது தடைபட்டுப் போகும்.
இந்த நோய் குறித்த ஆய்வுக்காகவே தனது தாயார் பெயரில் ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளார் ரவுலிங். அதற்காக ரூ. 70 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இந்த மையம் அமைகிறது. சயரோஸிஸ் தவிர பர்கின்சன் வியாதி, அல்ஸீமர் ஆகிய நோய்கள் தொடர்பான மருந்துகள் குறித்த ஆய்வும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications