துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீர்ர் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.

முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.

அமீரக தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷேக் அஹ்மத் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் பரிசு வழங்கினார்.

நிகழ்வில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற அமீரகப் பிரமுகர் ஷேக் அஹ்மத் ஹஸர் அல் மக்தூம், ஸ்டார்ண்டர்ட் சார்டர்ட் வங்கியின் ஆலோசகர் சகர் அல் சுவைதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டான் மில்லர், தீவிரவாதத் தாக்குதலின் காரணமாக தனது காலை இழந்து ஆறு ஆண்டுகள் சிகிச்சைக்குப் பின்னர் டயான்னி ரீட் என்ற பெண்மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

2011 ஆம் ஆண்டில் துபாய் மாரத்தான் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என அமீரக அதலெடிக் பெடரேஷன் தலைவர் அஹ்மத் அல் கமாலி தெரிவித்தார்.

கடைசி நேரம் வரை காத்திராமல் இப்போட்டியில் பங்கேற விரும்புவோர் முதலிலேயே தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள உதவியாக இப்பொழுதே வரும் ஆண்டு போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+