துபாயில் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய பெண்கள் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கான ஏழாவது இலவச மருத்துவ முகாம் வரும் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்திய கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறும்.
இரண்டாயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெறுவோருக்கும், மருத்துவ காப்பீடு பெற வசதியற்றவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
நீரிழிவு நோய் இருப்பவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் பரிசோதனைகளுக்கு வசதியாக காலி வயிற்றுடன் முகாமில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மருத்துவ முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணி வரை 050-1152021 அல்லது 056 -6945125 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.












Click it and Unblock the Notifications