பத்மஸ்ரீ விருதை நிராகரித்த கவிஞர் திடீர் மனமாற்றம்

இந்தியில் நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், கஜல், பாடல் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் கவிஞர் ஆச்சார்ய ஜானக் ஆச்சார்ய வல்லப சாஸ்திரி.
ஏற்கனவே பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு மத்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது.
ஆனால், ஏதோ ஒரு காலத்தில் சிறப்பாக எழுதினேன் என்பதற்காக இப்போது விருது கொடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார் சாஸ்திரி.
'எனக்கு பின் வந்து தற்போது எழுதிக்கொண்டிருக்கிற பலர் மிகவும் திறமையாக எழுதுகிறார்கள்.
1994ம் ஆண்டுகளில் நான் நன்றாக எழுதியிருக்கலாம். அதற்காக இப்போது 80 வயதில் நான் விருதை பெறுவது அர்த்தமற்றது.
இன்றைய தேதியில் எனது சிஷ்யர்களும், வளர்ந்து வரும் இளையத் தலைமுறையினர் தான் இந்த விருதை பெறத் தகுதியானவர்கள்' எனக் கூறி விருதை பெற மறுத்தார் சாஸ்திரி.
ஆனால், ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகள் வற்புறுத்தியதாலும், விரும்பிக் கேட்டுக்கொண்டதாலும் பத்மஸ்ரீ விருதை கவிஞர் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications