ஏன் இந்த இரட்டை நிலை?

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்தியர்களைவிட குறைவான சம்பளத்தில் வாழ்கிறார்கள். சம்பாதித்ததில் பெரும் செலவாக தாய் நாட்டிலிருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள ஆகும் போன் செலவே உள்ளது.
நம் நாட்டிலிருந்து சர்வதேச போன் அழைப்புகளுக்கான கட்டணத்தைக் குறைக்கும் மத்திய அரசு வளைகுடா நாடுகளுக்கு ஒரு அளவீடும், அமெரிக்காவுக்கு இன்னொரு அளவீடும் வைத்திருப்பது வளைகுடா இந்தியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுவதையே காட்டுகிறது.
இரட்டைக் குடியுரிமைக் கொள்கையிலும் நமது மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பாஜக அரசாக இருந்தாலும் இதே நிலைப்பாடே தொடர்கிறது!!
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications