இமயமலை பனிப்பாறை விவகாரம்: இந்தியாவின் மறுப்புக்கு ஐபிசிசி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: இமயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகிவிடும் அபாயம் குறித்து இந்தியாவின் மறுப்புக்கு அடுத்த வாரம் பதில் தருவோம் என்று பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுகளின் கூட்டமைப்பான ஐபிசிசி தலைவர் ஆர்.கே.பச்சோரி கூறியுள்ளார்.

புவிவெப்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் 2035ம் ஆண்டுக்குள் காணாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐபிசிசி அறிவித்திருந்தது.

ஆனால் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதை கடுமையாகவும், திட்டவட்டமாகவும் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அபுதாபியில் உலகின் எதிர்கால எரிசக்தி தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ஐபிசிசி தலைவர் ஆர்.கே.பச்சோரி இந்தியாவின் மறுப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்,

'கருத்து முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அவசரப்பட்டு கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதாக்கவும், பரபரப்பாக்கவும் விரும்பவில்லை.

எனவே, இந்தியாவுக்கு பதில் தருவதற்கு ஆதாரப்பூர்வமான அறிக்கையை தயார் செய்துகொண்டிருக்கிறோம். அடுத்த வாரத்தில் இதுபற்றிய பதில் அறிக்கையை வெளியிடுவோம்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+