திருவட்டார் அருகே பூமியில் திடீர் விரிசல்-வேரோடு சாயும் மரங்கள் : பீதியில் மக்கள்
குலசேகரம்: திருவட்டார் அருகே பரளியாற்றின் கரையோரத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள பாரதப்பள்ளி பகுதியில் பரளியாறு ஓடுகிறது. ஆற்றில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு அரை கிமீ தூரம் சிறிய அளவில் பூமியில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதன் ஆழமும் அதிகரித்து வருகிறது.
இந்த விரிசல் ஒரு அடி அகலத்தில் 5 அடி ஆழம் வரை விரிவடைந்திருக்கிறது. விரிசல் ஏற்பட்ட பகுதிக்கும், ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ரப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த பகுதியில் மண் அரிப்பை தடுப்பதற்காக கட்டப்பட்டிருந்த கான்கீரிட் தடுப்பு சுவர்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று விரிசலை பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications