கருணாநிதிக்கு 'செம்மொழிவேந்தர்'; பொள்ளாச்சி ந.மகாலிங்கத்துக்கு வாழும் வள்ளலார் விருது
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் உள்ள தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு 'செம்மொழிவேந்தர் விருது' வழங்கப்படுகிறது.
அருட்செல்வர் பொள்ளாச்சி ந.மகாலிங்கத்துக்கு வாழும் வள்ளலார் விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாரதிசுகுமாறன் தெரிவிக்கையில், 'தமிழ் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஐந்து தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறோம்.
2009 ம் ஆண்டுக்கான ஐம்பெரும் விருதுகளுக்குரிய தமிழ் அறிஞர்களை தேர்வு செய்ய பாவேந்தரின் மைந்தரும், இச் சங்கத்தின் தலைவருமான மன்னர்மன்னன், பொதுச் செயலாளர் பாரதிசுகுமாறன், பொருளாளர் மலரடியான், துணைத் தலைவர் உதியன், துணைச் செயலாளர் ரா.சஞ்சீவிராயர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்ததற்காகவும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகின்ற மாண்பை பாராட்டியும் தமிழக முதல்வருக்கு செம்மொழி வேந்தர் விருது வழங்க இக்குழு முடிவு செய்தது.
மேலும் பொள்ளாச்சி ந.மகாலிங்கத்துக்கு வாழும் வள்ளலார் விருது, வெ.இறையன்புக்கு சிந்தனை செம்மல் விருது, நல்லி.குப்புசாமிக்கு தமிழ்க்காவலர் விருது, எழுத்தாளர் திலகவதிக்கு பன்மொழி வித்தகர் விருதும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர்கள் சங்க விழாவில் விருதுகள் வழங்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications