மகாராஷ்டிரா-கலப்பு மண ஜோடிக்கு ரூ.50,000
Subscribe to Oneindia Tamil
மும்பை: கலப்பு ஜாதித் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் ஜாதிப் பிரச்சனையை ஒழிக்கும் முயற்சியாக கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் இம்முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் அலுவலக அதிகாரி கூறுகையில், 'ஜாதி விட்டு ஜாதியில் கலப்பு கல்யாணம் செய்வர்களுக்கு ரூ.20 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும்.
மேலும் தம்பதியின் பெயரில் ரூ.25 ஆயிரம் தபால் சேமிப்பு அல்லது இந்திர விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.
மீத பணம் ரொக்கமாக கல்யாண செலவினங்களுக்காக வழங்கப்படும்' என்றார்.
ஏற்கனவே மகராஷ்டிராவில் கலப்பு திருமணத்துக்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications