நேரு பிறந்த தினம்... சென்னையில் தலைவர்கள் அஞ்சலி!

பண்டித நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் ஆளுநர் பர்னாலா, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரிஅனந்தன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., உள்பட காங்கிரஸ் பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர்.
இதே போல் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்துக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன், யசோதா எம்.எல்.ஏ., தாமோதரன், சிவலிங்கம், பூவராகன், சி.டி. மெய்யப்பன், டி.வி.துரைராஜ், நாகராஜ், ஜீனத் சர்புதீன் உள்பட பலர் பங்கேற்று மலர் தூவினர்.
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி விருகம் பாக்கம் கருணை இல்லத்தில் மாநில துணை தலைவர் ஹசீனா சையத் அன்னதானம் வழங்கினார்.
அங்கு தங்கி படிக்கும் 50 மாணவர்களுக்கு கம்ப்யூட் டர் பயிற்சிக்கான உதவித் தொகையும் வழங்கினார். ராயபுரத்தை சேர்ந்த ஒரு சிறு வனுக்கு ரத்த புற்று நோய்க்கு மருத்துவ செலவுக்கு நிதி உதவியும் வழங்கினார்.
மேற்கு மாம்பலம் 123- வது வார்டு மாநகராட்சி அலு வலகத்தில் நேரு படத் துக்கு கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர் மாலை அணிவித்து மலர் தூவினார். மாணவ -மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கினார்.
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், பல பள்ளிகளில் ஒரு நாள் முன்பாகவே குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications