ரஷ்ய சர்க்கஸில் தீவிபத்து-50 விலங்குகள் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த பெரும் தீவிபத்தில் சிக்கி 50 சர்க்கஸ் விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வெளியே ஒரு சர்க்கஸ் நிறுவனம் முகாமிட்டு சர்க்கஸ் நடத்தி வந்தது. நேற்று திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட விலங்குகள் வெளியேற முடியாமல் சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.
இதில் குரங்குகள், முயல்கள் உள்ளிட்டவை அடக்கம். அனைத்துமே தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த விலங்குகள் ஆகும்.
இந்த தீவிபத்தில் மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications