சென்னை: தமிழில் அல்லாத பெயர் பலகைகள் விரைவில் அகற்றம்!
சென்னை: சென்னையில் தமிழில் அல்லாத பெயர் பலகைகள் அடுத்த சில நாட்களில் அகற்றப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும், அதற்கு அடுத்ததாகவே மற்ற மொழிகளில் எழுதலாம் என்று மாநகராட்சி உத்தரவிட்டது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி மே 31ம் தேதிக்குள் இதை அமலாக்க வேண்டும், எல்லா கடைகளிலும் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி கெடு விதித்திருந்தது. இந்தக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து தமிழ் அல்லாத பெயர் பலகைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இந் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரான சைதை ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அறிக்கையில், சில வணிக நிறுவனங்கள் தமிழ் பெயர் பலகைகளை வைக்கவில்லை. அந்த நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்பளிக்கும் வகையில் வரும் 20ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும், அதுவே இறுதி கால நீட்டிப்பு என்றும் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், வெளிநாட்டில் உள்ள மேயர் மா.சுப்பிரமணியன், நாளை மறுதினம் சென்னை திரும்பியவுடன் அடுத்த 2 நாட்களில் தமிழ் பெயர் அல்லாத பலகைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications