மே 27 - கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி !
கூடலூர்: கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் முதல் முறையாக வரும் 27ம் தேதி வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடந்து வருகிறது. ஊட்டியில் ரோஸ் மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற்றது. தற்போது குன்னூரில் பழக் கண்காட்சி நடந்து வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடக்க உள்ளது.
இந் நிலையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக முதல் முறையாக கூடலூர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கண்காட்சியை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து வாலிபால் போட்டி, ஆதி வாசி மக்களின் கலாச்சார நிகழ்ச்சி, பட்டிமன்றம், மேஜிக் ஷோ மற்றும் நாட்டிய, இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மறுநாள் மாலை பரிசளிப்பு விழாவும், ஆதிவாசிகள் பாரம்பரிய குரும்பா நடனமும் நடைபெறும்.
தோட்டக்கலை, வனத் துறை, இந்திய வாசனை திரவிய நிறுவனம், ஆவின், நெஸ்லே, சுற்றுலா துறை சார்பில் இதற்காக 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications