20 சதவீத சென்சஸ் பணிகள் நிறைவடைந்தன - இயக்குநர் கோபாலகிருஷ்ணன்
நெல்லை: தமிழதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 20 சதவிதம் நிறைவு பெற்றுள்ளதாக மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. ஜூலை 15ம் தேதி வரை 45 நாட்கள் இந்த பணி நடக்கிறது.
வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு ஆகிய பணிகளுக்காக தற்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 20 சதவிதம் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளது. வரும் நாட்களில் பணிகள் மேலும் விரைவுப்படுத்தப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் அனைத்து படிவங்களும் ஸ்கேனிங் செய்து கம்யூட்டரில் பதிவு செய்யப்படும். பின்னர் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் போட்டோ எடுத்து விரல் ரேகை பதிவு செய்யப்படும்.
பெங்களூரை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்கல் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் இந்த பணி மேற்கொள்ளப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கம்யூட்டர், இன்டர்நெட், தொலைபேசி ஆகிய புதிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பு பணிகள் முடிந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவரங்கள் திரட்டப்படும். எனினும் இந்த பணி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.
கடலோர கிராமங்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. அதன்படி 229 கிராமங்களில் 11 லட்சம் மக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட 8 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications