For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட் கோவிலில் 31 எருமை, 135 ஆடுகளை பலி கொடுத்த பக்தர்கள்

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே ஒரு கோவிலில் 31 எருமை மாடுகள், 135 ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்தனர் பக்தர்கள்.

பாரி மாவட்டம், புங்கால் என்ற கிராமத்தில் உள்ள ஆராத்யா தேவி கோவிலில்தான் இந்த விலங்குகள் பலியிடப்பட்டன. அதிகாரிகள் இதைத் தடுக்க வருவற்குள் பலி கொடுக்கும் சடங்குகளை பக்தர்கள் நிறைவேற்றி விட்டனர்.

இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி பல வருடங்களாக இங்கு நடந்து வருகிறதாம். ஆனால் இது சட்டப்படி குற்றமாகும் என்று போலீஸ் தரப்பிலும், மாவட்ட நிர்வாக தரப்பிலும் கூறியிருந்தபோதிலும் அதையும் தாண்டி இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடந்து வருகிறதாம்.

இந்த ஆண்டு இதைத் தடுத்து நிறுத்த தீவிரக் கண்காணிப்புக்குக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை ஏமாற்றி விலங்குகளை பலி கொடுத்துள்ளனர் பக்தர்கள்.

கூரிய கத்திகளாலும், அரிவாள் போன்றவற்றைப் பயன்படுத்தியும், ஒவ்வொரு விலங்காக பலியிட்டுள்ளனர் பக்தர்கள். இதனால் அந்த இடமே ரத்தக் காடாக காணப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English summary
In a grave violation of law, more than 31 male buffaloes and 135 goats were sacrificed in a temple premises to appease Goddess Aradhya Devi allegedly by her devotees during a day-long annual fair at Bunkhal village in Uttarakhand. Police have filed a case against this and launching a hunt on the accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X