வேலூரில் கடும் வெயில் – 107 டிகிரி வெளுத்தியது

Subscribe to Oneindia Tamil

Summer
வேலூர்: தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், வெயிலின் தலைநகராக மாறி வருகிறது வேலூர்.

தமிழகத்தில் கோடை காலத்தில் வேலூர், சேலம் உள்ளிட்ட சில நகரங்களில் மிக அதிக அளவில் வெயில் தாக்குவது வழக்கம். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்திலேயே அதிக அளவாக வேலூரில் கடும் வெயில் அடித்தது. 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் நேற்று அங்கு கொளுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

வெளியில் நடமாடக் கூடமுடியாத அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகலில் மக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து காணப்பட்டது. இளநீர், நுங்கு, தர்பூஸ் ஆகியவற்றின் விற்பனை கொடி கட்டிப் பறந்தது.

அடுத்து சேலத்தில் 104 டிகிரி வெயிலும், மதுரையில் 102 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

கோவையில் நேற்றைய வெயிலின் அளவு 100 டிகிரியாகும். சென்னையில் 98 டிகிரியாக வெயில் இருந்தாலும், வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.

இன்றும் கடும் வெயில்

இன்றும் தமிழகத்தில் வெயில் கொளுத்துகிறது. சென்னையில் 100 டிகிரி வெயில் அடித்தது. வேலூரிலும் வழக்கம் போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் 97 டிகிரி வெயில் அடித்தது. திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் வெளுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+