முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைப் பொங்கல்

தெப்பக்காட்டில் யானைகள் முகாம் உள்ளது. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு தாயை பிரிந்த, காயம் அடைந்த 24 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று இங்கு யானைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள யானைப் பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி முகாமில் உள்ள அனைத்து யானைகளையும் அருகில் உள்ள மாயார் ஆற்றுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி, விபூதி, சந்தனம் பூசினர்.
தொடர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு யானைகள் அழைத்து வரப்பட்டன. யானைகளை வரிசையாக நிற்க வைத்து விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்டது.
பின்னர் அனைத்து யானைகளுக்கும் கரும்பு, வெல்லம், தேங்காய், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.
யானைப் பொங்கலை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications
