உனக்காக காத்திருப்பேன்….
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
காதலுக்காக
காத்திருத்தல்
கொடுமையானது தான்…
பார்வைகள்
பரிகாசம் செய்ய
ஒவ்வொரு நொடியும்
யுகமாய் கழியும்…..
மனம் தடுமாறி
நிற்கையில்….
உனைக் கண்டவுடன்
எல்லாம் தலைகீழாகும்…
உனக்காக காத்திருந்ததன்
அர்த்தம் விளங்கும்…
மணித்துளிகள்
நிமிடங்களாக …
மறுநாளைக்காக
மனம் ஏங்கும்.












Click it and Unblock the Notifications