யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி: விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 2011 வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 2011 வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் பின்புறம் நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மோதவிருக்கின்றன.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
வரும் 10-ம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாள். அதனால் உடனே ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கத்தின் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.













Click it and Unblock the Notifications