அகஸ்தியர் மலைக்கு செல்ல ரூ.200 கட்டணம்: கேரள வனத்துறை
நெல்லை: அகஸ்தியர் மலை புனித பயணத்திற்கான அனுமதி டிக்கெட்டுகள் நாளை முதல் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியி்ல் அகஸ்தியர் மலை உள்ளது. பண்டைய காலத்தில் அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது. இங்கு அகஸ்தியருக்கு சிலை உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தி்ல் இந்த மலைக்கு மக்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அகஸ்தியர் மலைக்கு பக்தர்கள் செல்வதற்கு கேரள வனத்துறையினர் திடீரென தடை விதித்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள வன அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு வாங்கிய பிறகுதான் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான புனிதப் பயணம் வரும் 14-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்த பயணத்திற்கான அனுமதி சீட்டு வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் பிடிபி நகரில் உள்ள வன அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications