கட்டுகடங்காத கூட்டத்தால் திணறும் சபரிமலை : நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்காசி: சபரிமலையில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் கூடுகிறது. இதனால் சபரிமலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும், ஒரே கூட்டமாக உள்ளது.
சபரிமலையில் ஐயப்ப தரிசனத்திற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் உணவின்றி தவிக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர், பிஸ்கட், இனிப்பு, பலகாரங்கள் வழங்கும் பணி துவங்கியது. சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் காரணமாக சன்னிதானம் அருகே பெரிய நடை பந்தல் முதல் மரக்கூட்டம் கடந்தும் நீண்ட வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பம்பை வந்து சேரும் பக்தர்கள் அங்கேயே தடுக்கப்பட்டு நீலி்மலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், சரங்குத்தி மற்றும் சன்னிதானம் பகுதிகளில் நெரிசல் குறைந்த பிறகே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பதினெட்டாம்படி ஏற விரும்பும் பக்தர்களில் ஒரு நிமிடத்திற்கு 70 பேர் மட்டுமே ஏற முடிகிறது. இதுவே கடந்த ஆண்டு 100 பேர் படியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு பக்தர்கள் குறைவாக படியேற அனுமதிப்பதன் மூலம் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரி்ப்பதோடு, காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 24 மணி நேரமும் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பல மணி நேரம் நிற்கும் இடத்தை விட்டு நகரக் கூட முடியாத நிலையில் உணவின்றி, உறக்கமின்றி பக்தர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சில பக்தர்கள் மயக்கமடையும் நிலையும் ஏற்படுகிறது. மகர விளக்கு திருவிழா சாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதே சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளதால் தரிசனம் செய்ய 20 முதல் 22 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 தினங்களாகவே தமிழக-கேரள எல்லை புளியரையில் இருந்தே பம்பை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications