துபாயில் நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேக் தாவுது தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சங்கத்தின் சேவைகளைப் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார். கனி முன்னிலை வகித்தார். முஹம்மது ரஃபி வரவேற்புரை நிகழ்த்தினார். அப்ரோஸ் ஃபாத்திமா துவக்கமாக இறைவசனங்களை ஓதினார்.
தேரிருவேலி மௌலவி எஸ்.எஸ். அலி பாதுஷா பாஜில் மன்பயீ பொதுச்சேவையின் சிறப்பு குறித்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். கடையநல்லூர் மௌலவி இ.ஏ. அப்துல் ஹமீது பாஜில் பாகவி "ஒற்றுமை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஈமான் அமைப்பின் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் பொதுச் சேவையின் முக்கியத்துவம் குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்.
ஃபாஸ்ட் கூரியர் உரிமையாளர் எஸ். எம். ஃபாரூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேரிழந்தூர் தாஜுத்தீன் தீனிசைப் பாடல்கள் பாடினார். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் அகமது அஸ்லம் வழங்கினார்.
மஸ்கட் ஏ.ஜே. மீரா நெய்னா மரைக்கான் காஜியார் வழங்கும் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசான இலவச உம்ரா பயணத்திற்கு எஸ்.பி.எஸ். நிஜாம் தேர்வு செய்யப்பட்டார். சங்க தலைவர் பி. முஹம்மது அனஸ் அவர்களின் தலைமையில் தாயகத்தில் 300 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக பெரும் பங்காற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஜகுபர் நன்றியுரை நிகழ்த்தினார்.












Click it and Unblock the Notifications