ஜெட்டா தமிழ்ச் சங்கத்தில் டிச. 15ல் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி
ஜெட்டா: ஜெட்டாவில் டிசம்பர் 15ம் தேதி வாழ்க நலமுடன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஜெட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஷரபிஃயா இம்பாலா கார்டனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளனர்.
சிறப்பு மருத்துவர்கள் உரை
ஜெட்டாவில் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் வாழ்க நலமுடன் நிகழ்ச்சியில் இறைவன் கொடுத்த தலைக்கணினி எனும் தலைப்பில் நரம்பியல் நிபுணர் டாக்டர் எம். வேல்முருகன் உரையாற்றுகிறார். மேலும்,குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு எனும் தலைப்பில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சி.வெற்றிவேலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், நூருல் அமீன் 053 393 2352 / ராமானுஜம் 050 460 4036 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications