எங்கே போயின தீபாவளி வாழ்த்துகள்?

இன்டர்நெட், இமெயில், எஸ்எம்எஸ் இதெல்லாம் வருவதற்கு முன்பு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்டவற்றுக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருந்த ஒரே சாதனம் கிரீட்டிங் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டைகள்தான். விதம் விதமான, வித்தியாசமான, அழகான வாழ்த்து அட்டைகளைத் தேடி அலைவார்கள் நம் மக்கள். குறிப்பாக இளைஞர் பட்டாளம்தான் இந்த கார்டு அனுப்பும் வேலையில் படு சிரத்தையாக திரிவார்கள்.
கடை கடையாக ஏறி இறங்கி அலசிப் பார்த்து அழகான, பிடித்தமான அட்டையைத் தேடிப் பிடித்து வாங்கி வந்து அதில் மேலும் சில வார்த்தைகள், வாசகங்களை சேர்த்து கவரில் வைத்து ஸ்டாம்பு ஒட்டி போஸ்ட் செய்து விட்டு நிம்மதி மற்றும் பெருமிதப் பெருமூச்சுடன் வீடு திரும்புவதை ஒரு கடமையாகவே வைத்திருந்தனர்.
தபால் துறையின் தாமதம் உலகப் புகழ் பெற்றது என்பதால் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி அனுப்புவதும் உண்டு. இல்லாவிட்டால் இந்த தீபாவளிக்கு அனுப்பும் அட்டை அடுத்த தீபாவளிக்குத்தான் போகும் என்ற பயமும் இதற்குக் காரணம். இப்படியெல்லாம் மெனக்கெட்டு கார்டு அனுப்பிய காலம் போய் விட்டது. இப்போது விரல் நுனியில் விதம் விதமான வாழ்த்து செய்திகளை இன்டர்நெட்டில் சர்ச் செய்து, இமெயில் முகவரியை மட்டும் கொடுத்தால் சட்டென்று போய் விடுகிறது. அதேபோல தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளியன்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் கலாச்சாரம் பரவி விட்டது.
இப்படி இன்டர்நெட்டும், எஸ்எம்எஸ்ஸும், இமெயிலும் ஆக்கிரமித்துக் கொண்டதால் வாழ்த்து அட்டைகளைத் தேடிப் போவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போய் விட்டது. இருந்தாலும் இந்த அட்டைகள் இன்னும் விற்றபடிதான் உள்ளன. வாழ்த்து அட்டைகளை அனுப்புவதை தொடருவோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
என்னதான் எஸ்எம்எஸ், இமெயிலில் வாழ்த்து சொன்னாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதில் உள்ள சுகமே அலாதிதான்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications